Monday, April 1, 2013


இங்குதான் வெப்ப அழுத்த குண்டினால் தமிழ்ச்செல்வன் அவர்கள் இறந்தார் !
01 April, 2013 by admin
2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி அதிகாலை, இலங்கை வான்படையினர் தாக்குதலில் பலியானார் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள். அவர் 1ம் திகதி இரவு எங்கு சென்றார். அவர் 2ம் திகதி எங்கு தங்குவார் என்பது போன்ற விடையங்கள் யாருக்கு தெரியும் ? இலங்கை அரசோ தனது வேவு விமானத்தின் மூலமாகவே நடமாட்டத்தை அறிந்து தாக்கியதாகக் கூறிவருகிறது. இருப்பினும் சுப.தமிழ்ச்செல்வனுக்கு மிகவும் நெருக்கமானவர்களே காட்டிக்கொடுத்தார்கள் என்றும் சில செய்திகள் உலாவருகிறது. கிளிநொச்சி இரணைமடுக் குளத்துக்கு வடமேற்க்கில் 1.6 கிலே மீட்டர் தொலைவில் உள்ள, திருவையாறு என்னும் பகுதியில் தான் தமிழ்ச்செல்வன் அவர்களின் ஒரு அலுவலகம் அமைந்திருந்தது. அன்று இரவு அவர் தங்கியிருந்த இடத்தை தாக்கி அழிக்க இலங்கை விமானப்படையினர், வெப்ப அழுத குண்டுகளைப் பிரயோகித்தனர் என்று சொல்லப்படுகிறது. 

இதனை பங்கர் பேஸ்டர் குண்டு என்று அழைப்பது வழக்கம். அன்றைய தினம் தமிழ்ச் செல்வன் அவர்கள், அலுவலகத்தில் இருந்திருக்கிறார். வானில் இலங்கை வான்படையின் விமானங்கள் வந்ததை அடுத்து, அவர் அலுவலகம் ஓரமாகவே ஒரு பாதை வழியாக சென்றால் பாதுகாப்பான பங்கர் ஒன்றிற்க்குச் செல்லலாம். அப்படி அவர் பங்கருக்குள் சென்ற பின்னரே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் குண்டானது இந்திய இராணுவத்தினால் கார்கில் போரின் போது பாக்கிஸ்தான் ஊடுருவல் தீவிரவாதிகளை அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. ராடரின் வழிநடத்தலில் இந்தியா விமானி ஒருவரின் வழிகாட்டலில் இலங்கை விமானப்படை ஜெற்விமானங்கள் இந்தக் குண்டைப் 
போட்டுள்ளன. இக் குண்டுடன் சேர்த்து மொத்தமான 6 குண்டுகள் போடப்பட்டாலும் முக்கியமான குண்டு வெடிக்க வேண்டிய இடத்தில் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப் பகுதிக்குச் சென்ற சிலர் எடுத்துள்ள வீடியோவில் பல உண்மைகள் தெரியவந்துள்ளது. இவ்விடத்தையும் இலங்கை இராணுவம் விட்டுவைக்கவில்லை. இதனையும் அதி பாதுகாப்புடன் கூடிய சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளது இலங்கை இராணுவம். (புகைப்படங்கள் இணைப்பு)










Send To Friend |    செய்தியை வாசித்தோர்: 2056 

No comments:

Post a Comment