அவை உறுப்பினர்களுக்கு வணக்கம் !
மனித உரிமைப் பேரவை விவகாரம் நிறைவடைந்து ஓய்வடைந்துள்ள நிலையில் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான எமது ஊடகவழிப் பரப்புரைகளை எதிர்வரும் ஏப்ரல் 2ம் நாள் முதல் தொடங்கவுள்ளோம்.
இந்த பரப்புரை பணியில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களை பங்கெடுத்துக் கொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
தொலைக்காட்சி - வானொலி - இணையம் - பத்திரிகை - மின்னஞ்சல் - கைபேசி என இன்றைய நவீன ஊடகப்பரிப்பினை முழுமையாக எமது பரப்புரைகளுக்கு பயன்படுத்த எண்ணியுள்ளோம்.
- எழுத்து
- பேச்சு
- வரைகலை
- தொழில்நுட்பம்
- ஓருங்கிணைப்பு
என பரப்புரைகளுக்கு பொருத்தமான செயற்பாடுகளுக்கு வல்லமை உள்ளவர்களின் பங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை மேற்குறித்த விடயங்களுக்கு பொருத்தமானவர்கள் பொதுத்தளத்தில் இருப்பின் அவர்களை எம்முடன் தொடர்புபடுத்தி விடுமாறும் வேண்டுகின்றோம்.
நன்றி
ஊடக அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
No comments:
Post a Comment