இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் பிரத்யேக பேட்டி

கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 1974 மற்றும் 1976 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படியே அனைத்தும் நடைபெற்று வருவதால் அந்தப் பிரச்சனையை மீண்டும் எழுப்ப வேண்டிய அவசியமில்லை என இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
சிங்களவர்கள் இந்தியாவின் ஓடிஷா, வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்தை இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது வரலாற்று உண்மை என கூறிய அவர், தமிழர்களும், சிங்களவர்களும் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள் என்றார். தமிழர்களுக்கு இந்தியாவின் தென் பகுதியிலும், சிங்களவர்களுக்கு வடகிழக்கு பகுதியோடும் தொடர்பு இருக்கிறது. இதை மறுக்க முடியாது. கலிங்கா, ஓடிஷாவில் இருந்து கி.பி. 6ம் நூற்றாண்டில் சிங்களவர்கள் இலங்கைக்கு வந்து குடியேறினர்.அதன் பிறகு கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்தனர். அப்படி குடியேறியவர்களுக்கு அப்போதே அரசாளும் உரிமை இருந்தது. இப்போது அனைவரும் இலங்கை குடிமகன்களாக இருக்கிறோம்.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்க எதிர்ப்புத் தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும் கூறிய கரியவாசம் விளையாட்டுடன் அரசியலை இணைத்துப் பார்க்கக் கூடாது என்றும் கூறினார்.
காணொளி:
This is like one you find in Esop tales
there were a fighting between animals and birds. at one time birds were appear to win the bat joined the birds and call said see my wings I am bird so let be me in your side, In few days animals appear to win the bat went to the animal side told animals see I look like rat, so I am a animal and join them. after some time both animal and birds decided to end the fighting with no win situation and started attacking the bat for it opportunistic behaviour ! that is why bat is now hiding in the dark caves away from both animals and birds. The same way sinhalease are a mixture of tamil and some traces of north indian origins end up like the bat isolated for ever in the future.