Wednesday, March 20, 2013

புலிகளின் தாகமான தமிழீழம் இன்று உலகத் தமிழர்களின் தாகமாக மாறியுள்ளது- ருத்திரகுமாரன் Posted by: Sudha Updated: Wednesday, March 20, 2013, 18:50 [IST] Ads by Google iPage -2013 Best Web Host  The Best Rated Web Hosting 2013. Free Setup & Domain, Only £1.99 ! iPage.com Advertise on YouTube  Reach qualified customers and grow your business. Get started today. google.co.uk/ads/video சென்னை: தாய்த:தமிழகம், தமிழீழத் தாயகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்ற மூன்று பிரிவுகளும் இணைந்து போராடும் சூழல் வந்துள்ளது. புலிகளின் தாகமாக இருந்த 'தமிழீழம்' இப்போது, உலக தமிழர்களின் தாகமாக மாறியுள்ளது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தென்னாசியப் பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான், ஐ.நா மனித உரிமைச சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வந்திருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும். சென்னையில் கடந்த திங்கட்கிழமை இணைய வழி நடந்த ஊடக மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசியபோது ருத்திரகுமாரன் இதைத் தெரிவித்தார். அவரது பேச்சு... தமிழகத்தில் உணர்வெழுர்சியுடன் நடந்துவரும் மாணவர் போராட்டம் பாராட்டுக்குரியது. மாணவர் போராட்டம் மட்டுமே ஒரு இனத்தின் விடுதலைக்கு, எழுச்சியை ஏற்படுத்தும் சக்தி. மாணவர்களால மட்டுமே, இந்திய அரசை நிர்ப்பந்திக்க முடியும். இலங்கையில் ஈழத் தமிழர் மீது நடந்தது ஒரு இனப் படுகொலையே. அத்தகைய இனப் படுகொலையை எதிர்த்து ஐ.நா.மனித உரிமைச்சபையில், இந்திய அரசு 'அனைத்துலக சுயாதீனமான விசாரணையை' முன்னெடுக்க வலியுறுத்தும் வகையில், தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்பதை, தாய்த்தமிழக மாணவர் போராட்டங்கள் மூலமும், மக்கள் போராட்டங்கள் மூலமும், வலியுறுத்த வேண்டும். தி.மு.க தலைவர் கருணாநிதி, 'வலுவான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் எனக் கூறியிருப்பதை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. அந்த முடிவில் திமுக தலைவர் உறுதியாக இருக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி, 'அனைத்துலக விசாரணை, சிறிலங்காவுக்கு மீது பொருளாதார தடை' ஆகியவனற்றை கோரியிருப்பது பாராட்டத்தக்கது. தமிழக ஆளுநர் உரையிலும், முதல்வரின் உரையிலும், 'இலங்கையில் நடந்தது ஒரு இனப் படுகொலையே' என்பதை கோரியிருப்பது வரவேற்கதக்கது. இந்திய மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். உலக நாட்டு அரசுகள் இலங்கையை எதிரி நாடாக கருத தயாராயில்லை. தங்களது அரசின் நலனில் நின்று கொண்டு, இலங்கைக் பிரச்சனையை அணுகுகின்றன. அதனால்தான் தெரிந்து இருந்தும், 'இனப்படுகொலை' என்ற சொல்லை பயன்படுத்த மறுக்கின்றன. அவர்கள் தங்களது அரசுகளின் நலனில் நின்று பார்ப்பதை மாற்றி கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்களது நலனும், நமது கோரிக்கையும், சேரும் இடங்களை நாம் கண்டு அணுக வேண்டும். தாய்த:தமிழகம், தமிழீழத் தாயகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்ற மூன்று பிரிவுகளும் இணைந்து போராடும் சூழல் வந்துள்ளது. புலிகளின் தாகமாக இருந்த 'தமிழீழம்' இப்போது, உலக தமிழர்களின் தாகமாக மாறியுள்ளது. தமிழீழத்தை பெற்று தர இந்திய முயலவேண்டும்.தமிழீழத்திற்கு இந்திய அரசு உதவினால், அது காஷ்மீரை இந்தியா தனிநாடாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற குரலை வலுப்படுதுவதாக ஆகுமே? என்பது தவறானது. காஷ்மீர் விவிகாரம் வேறு, ஆனால் இலங்கையில் நடந்தது 'இனப்படுகொலை'. சுனாமி வந்தபோது, அழிவுகளில் சிக்கிய மக்களை மீட்க, புலிகள் உலக சமூகத்தின் உதவிகளை கொழும்பு மூலம் கொடுக்காதீர்கள் என்ற கோரிக்கையை வைத்தார்கள். அதேபோல இப்போது 'மீள்குடியேற்றம்' விரும்புவோர், கொழும்பு மூலம் அதை கொடுத்தால் அது தமிழ் மக்களுக்கு போய் சேராது . உலக நாடுகள் வடக்கு-கிழக்கு பகுதிகளான தமிழர் தாயகப் பிரதேசங்களில் தங்களது தூதரகங்களை திறக்க வேண்டும் என்றார் ருத்திரகுமாரன்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/20/tamilnadu-ruthrakumaran-says-india-should-have-171858.html

No comments:

Post a Comment