லிபாராவின் மற்றொரு வீட்டுத்திட்டம் - மேலும் 50 வீடுகள் கையளிப்பு
வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஏற்கனவே 50 வீடுகளைக் கட்டிக் கொடித்திருந்த லிபாரா மொபைல்நிறுவனத்தின் அங்கமான ‘லெபாரா நிதியத்திம்’ (Lebara Foundation) மேலும் 50 வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வாழ்விடத்தை வழங்கும் நோக்கில்கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இந்த வீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
வன்னியில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்றதால் அதில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் இப்பொழுதும்அவல வாழ்வில் சிக்கித் தவிக்கும் பின்புலத்தில் லிபாரா நிறுவனத்தின் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில், வன்னியில் போரால் பாதிக்கப்பட்டமக்களிற்கென 50 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படட்டிருந்தன. இதேபோன்ற மற்றொரு 50 வீடுகள் அடங்கிய தொகுதியேதற்பொழுது பரந்தனில் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறைந்த விலையில் வெளிநாட்டுத் தொலைபேசிச் சேவைகளை வழங்கும் ‘லெபாரா மொபைலின்’ அங்கமான லெபாராநிதியம், இலங்கை, இந்தியா உட்பட பல உலக நாடுகளில் பல்வேறு தொண்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், ஆசியர்களும் பயன்பெறும் வகையில் அதிநவீன நூலகம் ஒன்றுகிளிநொச்சியில் அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
போரால் பாதிக்கப்பட்டவர்களில் 500 பேருக்கு செயற்கை உறுப்புக்கள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ள நிலையில்,மேலும் 500 பேருக்கு செயற்கை உறுப்புக்கள் பொருத்தும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தியா தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள 113 ஏதிலிகள் முகாம்களில் உள்ள 4000 இற்கும் மேற்பட்டசிறுவர்களுக்கு கடந்த பல வருடங்களாக லிபாரா நிதியத்தினால் பல்வேறு பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கடந்த வருடம் லிபாரா நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தாயகம், தமிழ்நாடு மற்றும் உலகில் உள்ளஒரு இலட்சத்து 75 ஆயிரம் சிறுவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு மில்லியன் யூரோவை ஐக்கிய நாடுகள் சிறுவர்நிதியத்திற்கு லிபாரா வழங்கி இருந்தது.
__._,_.___
Attachment(s) from Para Prabha
10 of 20 Photo(s) (View all Photos)
Reply via web post | Reply to sender | Reply to group | Start a New Topic | Messages in this topic (1) |
No comments:
Post a Comment